நம்மாழ்வார் அங்கங்க வேளாண்மை விருது குறித்த அதிகாரிகளின் வயலாய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாரத்தில் வேளாண்மையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை விருதுக்கு உழவன் செயலி மூலம் பதிவு செய்த சாத்தனூர் கிராம விவசாயி திரு கணேசன் சீனிவாசன் அவர்களின் வயல் வேளாண்மை துறை அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அவரது வயலில் இயற்கை வேளாண்மை மூலம் அசோலா உற்பத்தி ,மண்புழு உரம் தயாரிப்பு,பஞ்சகாவியம் ,மீன் அமில அமிலம் மற்றும் அங்கங்க காய்கறி உற்பத்தி ஆகியவை மேற்கொண்டு வருகிறார். இவ் வயல் ஆய்வில் வேளாண்மை துறையின் துணை இயக்குனர் மாநில அரசு திட்டம் (பொ) ஏழுமலை , துணை இயக்குனர் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உமாபதி, தோட்டக்கலை உதவி இயக்குனர் பால வித்யா, வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் வேளாண்மை அலுவலர் குழு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு மேலும் அங்கங்க வேளாண்மை குறித்த கருத்துக்கள் தெரிவித்தனர்...

Tags

Next Story