FIH - ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் -2025 சுற்றுப்பயண ஊர்வலத்தினை வரவேற்றார் அமைச்சர் மா. மதிவேந்தன்.
NAMAKKAL KING 24X7 B |21 Nov 2025 7:12 PM ISTஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்த FIH - ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் -2025 சுற்றுப்பயண ஊர்வலத்தினை வரவேற்றார்.
நாமக்கல் மாவட்டம், பாச்சல் பாவை கல்வி நிறுவனத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , மாவட்ட ஆட்சியர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை மற்றும் மதுரையில் வருகின்ற 28.11.2025 முதல் 10.12.2025 வரை நடைபெறவுள்ள FIH - ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் 2025 சுற்றுப்பயண ஊர்வலத்தினை வரவேற்றார்.அகில இந்திய ஹாக்கி சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் 28.11.2025 முதல் 10.12.2025 வரை நடைபெற உள்ளது. ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலக கோப்பை போட்டிகளில் இந்தியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கொரியா, அர்ஜென்டைனா, சீனா, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், பங்களாதேஷ் உட்பட 24 நாடுகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். மதுரையில் மூன்று பிரிவுகளுக்கான போட்டிகளும், சென்னையில் மூன்று பிரிவுகளுக்கான போட்டிகளும் நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் வீதம் 24 அணிகள் இப்போட்டிகளில் பங்குகொள்ள இருக்கின்றனர். இப்போட்டிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கடந்த 05.11.2025 அன்று சென்னையில் நடைபெற்ற ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலக கோப்பையின் அறிமுக விழாவினை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இக்கோப்பையினை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வருகிறது.அன்படி, இன்றைய தினம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற இக்கோப்பையின் வரவேற்பு மற்றும் அறிமுக விழாவில் கலந்து கொண்டு, ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் 2025 சுற்றுப்பயண ஊர்வலத்தினை வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில், பாவை கல்வி நிறுவனர் மற்றும் தலைவர் என்.வி.நடராஜன், மண்டல முதுநிலை மேலாளர் (கோவ மண்டலம்) ச.அருணா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.கோகிலா, நாமக்கல் மாவட்ட ஹாக்கி பிரிவு தலைவர் டாக்டர்.கே.நடராஜன் உட்பட ஒருங்கிணைந்த ஹாக்கி சங்கம், நாமக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம், பயிற்றுநர்கள் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story




