விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை மனு தாக்கல்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை மனு தாக்கல்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் (தனி) போட்டியிட உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மனுதாக்கல் செய்தார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் (தனி) போட்டியிட உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மனுதாக்கல் செய்தார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் (தனி) போட்டியிட உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மனுதாக்கல் செய்தார். தமிழகத்தில் மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்புமனுதாக்கல் மார்ச் 20}ஆம் தேதி தொடங்கியது. முதல் இரு நாள்களில் யாரும் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்யவில்லை. இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிப் பொதுச் செயலர் துரை.ரவிக்குமாரும், அதிமுக கூட்டணியில் அதிமுகமாவட்ட மாணவரணிச் செயலர் ஜெ. பாக்யராஜும், பாஜக கூட்டணியில் பாமகவைச் சேர்ந்த முரளிசங்கரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

சுயேச்சை வேட்பாளர் மனுதாக்கல் : இந்நிலையில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு மனுதாக்கல் தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பாண்டூர் புதுகாலனியைச் சேர்ந்த கேசவன் மகன் அரசன் (69) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்தார். தொடர்ந்து அவர் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி. பழனியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இவர் ஏற்கெனவே மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 4 முறையும், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 4 முறையும் மனுதாக்கல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் தொகுதியில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒருவர் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மனுதாக்கல் இல்லை.

Tags

Next Story