நாமக்கல்லில் வேட்பு மனு தாக்கல்
பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இன்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான மருத்துவர் ச. உமா, கட்சிகளின் வேட்பாளர்களிடம் தனித்தனியாக வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தொடக்கமாக, இந்தியா கூட்டணியின் திமுக தலைமையில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் V.S. மாதேஸ்வரன், தமது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்தார். வேட்பாளர் உடன் திமுகவின் ஆதிதிராவிடர் நலக்குழு மாநிலத் துணைத் தலைவரும் மாநில வனத்துறை அமைச்சரமான டாக்டர் மா. மதிவேந்தன், திமுக மாவட்ட செயலாளர்கள் K.R.N. இராஜேஷ்குமார் MP, மதுரா S. செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து உரிய ஆவணங்களில், வேட்பாளர் கையொப்பமிட்டு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது.
இத்தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் நாமக்கல் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சு. தமிழ்மணி, தமது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் P. தங்கமணி, டாக்டர். வெ. சரோஜா உள்ளிட்டோர் வந்து இருந்தனர்.
வேட்பாளர் தமிழ்மணி நாமக்கல் மாவட்ட அதிமுகவின் வர்த்தக அணி அமைப்பாளராக உள்ளார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் Dr. K.P. இராமலிங்கம், தமது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்தார். அவருடன் பாஜக மாநில துணைத்தலைவர் V.P. துரைசாமி, நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர்கள் N.P. சத்தியமூர்த்தி, M. இராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பாஜக வேட்பாளர் டாக்டர் கே. பி. இராமலிங்கம் அக்காட்சியின் மாநில துணைத்தலைவராகவும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளராகவும் உள்ளார். இதனைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.