திருப்பூரில் கராத்தே சீருடையுடன் வேட்பு மனு தாக்கல்

திருப்பூரில் கராத்தே மாஸ்டர் கராத்தே சீருடை அணிந்து கராத்தே செய்தவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருப்பூரில் நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர் இதில் கராத்தே மாஸ்டர் ஒருவர், கராத்தே சீருடை அணிந்து வந்து காராத்தே செய்தவாறு ஆட்சியர் அலுவலகம் வந்ததுடன் வேட்புமனு தாக்கல் செய்தார். திருப்பூர் நாடாளுமன்ற வேட்பு மனு தாக்கல்கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது கடந்த இரண்டு நாட்களாக எந்த ஒரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லைஇந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று காலை திருப்பூர் தொட்டிபாளையம் சேர்ந்த வெங்கடசாமி என்பவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதேபோல நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் என 10 தேர்தல் சந்தித்த ஈரோடு அந்தியூரை சேர்ந்த ஷேக் தாவுத் என்பவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து சென்னையே சேர்ந்த, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன் என்பவர் நாடார் சமுதாய மக்கள் சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்தார். கொங்கு மண்டலத்தில் நாடார் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்படுவதாகவும் எனவே கொங்கு மண்டலத்தில் நாடார் சமுதாயத்தில் வளர்ச்சியை உறுதிப்படுத்த சென்னையில் இருந்து வந்து திருப்பூரில் போட்டியிடுவதாக தெரிவித்தார். இதே போல திருப்பூர் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ரங்கசாமி என்பவர் கராத்தே உடை அணிந்து கராத்தே செய்து காண்பித்தபடியே மனு கொடுக்க வந்திருந்தார் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் வரை கராத்தே செய்தபடியே சென்றார் திருப்பூரில் இன்று மட்டும் நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

Tags

Next Story