ஜன.22 ல் வாக்காளர் இறுதி பட்டியல்

ஜன.22 ல் வாக்காளர்  இறுதி பட்டியல்

மாவட்ட ஆட்சியர்  ராஜ கோபால் சுன்கரா 

வாக்காளர் இறுதி பட்டியல் ஜனவரி 22 ம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஜனவரி 1 ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கத்திருத்தம் 2024-ஐ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2222 வாக்குசாவடிகளில் கடந்த நவம்பர் மாதத்தில் சிறப்பு முகாம் நடத்தி பொது மக்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டது. தேர்தல் ஆணையத்தால் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2024 இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2024 அன்று வெளியிடப்படும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நேர்யில் சிறப்பு கருக்க திருத்தம் 2024, தேர்தல் ஆணைய அட்டவணையில் வாக்காளர் பட்டியலில் இறுதி வெளியீடு நாள் மாற்றி அமைக்கப்பட்ட அறிவிக்கையின்படி, சிறப்பு சுருக்கத்திருத்தம் 2024 இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2024 ற்கு பதிலாக 22.01.2024 அன்று வெளியிடப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவரும் , மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story