சேலம் அருகே மின்சாரம் தாக்கி பைனான்ஸ் ஊழியர் பலி
கோப்பு படம்
சேலம் அருகேயுள்ள சோளம்பள்ளம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (47). பைனான்ஸ் கம்பெனியில் கலெக்சன் ஊழியராக வேலை செய்து வந்தார். அவரது சசோதரி மகள் திருமணத்திற்காக வீட்டை சுற்றிலும் மின் விளக்கு அமைத்திருந்தனர்.
இதற்காக சுவிட்ச்பாக்சை கழிவறையில் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பழனிசாமி, கழிவறைக்கு சென்று தண்ணீரை எடுத்து காலில் ஊற்றினார். சுவிட்ச் பாக்ஸ் இருந்ததை அவர் கவனிக்கவில்லை.
இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்தனர். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் இறந்து போனார்.
இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் திருமண வீடு சோகமானது.