சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்த நிதித்துறை அமைச்சர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான இடம் கையகப்படுத்தும் பணி முழுவதுமாக முடிந்து விட்டது.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள் விரைவில் துங்கப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமப்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். பட்டாசு கடை மற்றும் ஆலைகளில் விதிமீறல்கள் இருக்கும் எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த இரண்டு நாட்களாக சிவகாசி பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.