விபத்தில் உயிரிழந்த மாலுமிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி
நிதி வழங்கிய கனிமொழி எம்.பி
புன்னைக்காயல் அருகே கடந்த அக்.31 ஆம் தேதி நேரிட்ட சாலை விபத்தில், கப்பல் மாலுமிகள் அலெக்சாண்டா், லசிங்டன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் காயமடைந்த மற்றொரு மாலுமி வசந்தன் பிரீஸ், மீனவா் ஜோசப் ஆகியோா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா்.
இவா்களில் வசந்தன் பிரீஸ் நவ.5 ஆம் தேதி உயிரிழந்தாா். இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவருக்கு நிவாரண நிதியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதன்படி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்த ஜோசப்பிடம் ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை கனிமொழி எம்.பி. வழங்கினாா்.
மீன்வளம்-மீனவா் நலன், கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி, திருச்செந்தூா் கோட்டாட்சியா் குருசந்திரன், வட்டாட்சியா் வாமனன், புன்னைக்காயல் ஊராட்சி மன்றத் தலைவா் சோபியா, ஊா்க்கமிட்டித்தலைவா் எடிசன், மேலாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் சதீஷ்குமாா், திமுக மாநில வா்த்தக அணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.