ஊராட்சியில் நிதி முறைகேடு; பொதுமக்கள் புகாரால் பரபரப்பு

ஊராட்சியில் நிதி முறைகேடு; பொதுமக்கள் புகாரால் பரபரப்பு
கோடாந்தூர் ஊராட்சியில் நிதி முறைகேடு குறித்து பொதுமக்கள் புகார் அளித்ததால் பரபரப்பு உண்டானது.

கோடாந்தூர் ஊராட்சியில் நிதி முறைகேடு. பொதுமக்கள் புகாரால் பரபரப்பு. குடியரசு தினத்தன்று கரூர் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்ட மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவிட்டார். மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆயினும், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கோடந்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் முறையாக நடத்தவில்லை என மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பினர் பொதுமக்கள். புகாரை விசாரித்த மாவட்ட ஆட்சியர்,மீண்டும் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் உத்தரவிட்டார். இன்று கோடந்தூர் பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர் தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வைக்கப்பட்ட பொருள் குறித்து விவாதம் நடைபெற்றது. ஊராட்சிக்காக செலவிடப்பட்ட செலவினங்களில் ரூபாய் சுமார் 30 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் வைத்த புகாரால், சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மேலும் பரபரப்பு அதிகரித்தது.

Tags

Next Story