தலா ரூ.6 ஆயிரம் நிதியுதவி; முதல்வருக்கு நன்றி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட சுப்பிரமணியன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் துரித மாக மீட்பு பணிகளை மேற்கொண்டதுடன், பாதிக்கப்பட்டவர்க ளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது,
மேலும் செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஜெயங்கொண்டான், பொன்பத்தி, ஆலன்பூண்டி, காட்டுசித்தாமூர், மாத்தூர் திருக்கை, மனுவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் ரூ.15 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் மின் மோட்டார், பைப்லைன் அமைத் தல், சிமெண்ட் சாலை, தார் சாலை, வடிகால் வாய்க்கால் அமைத் தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள் வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் கவுன்சிலர்கள் அன்னம்மாள், சாவித்திரி, டிலைட், துரை, கமலா, முரளி, சீனிவாசன், மல்லிகா, பனிமலர், மணி, ஞானாம்பாள், கலைவாணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணி மாறன், சுந்தரபாண்டியன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.