காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம்

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் , ”மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில் " என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ”மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்படி, இன்று காஞ்சிபுரம் வட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை குறித்து கேட்டறிந்து, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதியை பார்வையிட்டார். பின்பு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள உயிர் மருத்துவ சேமிப்பு அறையை (BIO MEDICAL ROOM) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிணவறையை பார்வையிட்டார். இதன் தொடர்ச்சியாக Radiology Department-ல் ஆய்வு மேற்கொண்டு, தீவிர இருதய சிகிச்சை பிரிவினையும் பார்வையிட்டு, கர்ப்பகால புறநோயாளிகள் பிரிவினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தொடக்கநிலை இடையீட்டுச் சேவை மையம் மற்றும் காசநோய் மையத்தினையும் பார்வையிட்டார்கள். மேலும் தொற்றாநோய் பிரிவினையும் மற்றும் ஆண்கள் பொதுநல புறநோயாளிகள் பிரிவினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பரிசோதனை அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனை பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, அரசு கால்நடை மருத்துவமனையை பார்வையிட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவறையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, இ-சேவை மையத்தினையும் பார்வையிட்டு, பணியாளர்கள் உடன் வட்டாட்சியர் கூட்ட அரங்கத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். கூட்டுறவு துறை சார்பில், (1 நபருக்கு ரூ.10,000/- வீதம்) 7 நபர்களுக்கு ரூ.70,000/- மதிப்பிலான சிறு வணிக கடன் காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் முதல்நிலை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வு விவரங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் விவரங்களை கேட்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து “உங்களை தேடி உங்கள் ஊரில்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். இதில் 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

Tags

Next Story