வீடு தேடி சென்று ரேஷன் கார்டுதாரர்களின் கைவிரல் ரேகை பதிவு

வீடு தேடி சென்று ரேஷன் கார்டுதாரர்களின் கைவிரல் ரேகை பதிவு

 சேலம் மாவட்டத்தில் ரேஷன்கார்டுதாரர்களின் வீடு தேடி சென்று அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சேலம் மாவட்டத்தில் 1,258 முழுநேரம், 457 பகுதி நேரம் என மொத்தம் 1,715 ரேஷன் கடைகளில் 10 லட்சத்து 98 ஆயிரத்து 961 ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரம் டன் அரிசி, 1,345 டன் சர்க்கரை, 290 டன் கோதுமை, ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெய், 870 டன் துவரம் பருப்பு உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.

ரேஷன் கடைகளில் பொதுமக்களின் கை விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் யார் வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை உள்ளது. குறிப்பாக, அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களான 9 லட்சத்து 59 ஆயிரத்து 744 பி.எச்.எச். ரேஷன் கார்டு தாரர்கள், 78 ஆயிரத்து 403 ஏ.ஏ.ஒய். ரேஷன் கார்டுதாரர்கள் அட்டைகளில் பெயர் உள்ள அனைவரும் தங்களது கை விரல் ரேகையை அவர்களின் வசதிப்படி சம்பந்தப்பட்ட கடைகளுக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்து உள்ளது. இதனிடையே பணி முடிந்த பின்னர் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று பயனாளிகளின் கை விரல் ரேகை பதிவு செய்யும் பணியில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளவில்லை என்றால், பொருட்கள் வழங்கப்படாது என்ற தகவலை நம்ப வேண்டாம் என்று கலெக்டர் பிருந்தா தேவி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் அவர் ஆய்வுக்கூட்டம் நடத்தி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story