குடிக்க பணம் கேட்டு தாயை தாக்கிய மகன் மீது வழக்கு
பைல் படம்
விருதுநகர் அருகே குடிப்பதற்கு பணம் கேட்டு தாயை தாக்கிய மகன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் புதூர் கன்னிச்சேரி பகுதியைச் சார்ந்தவர் விஜயா வயது 45 .இவருடைய மகன் ராஜ்குமார். இவர் தினமும் குடித்துவிட்டு தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு பிரச்சினை செய்து வருவதாகவும் இதுகுறித்து பலமுறை காவல் நிலையத்திற்கு சென்று மகனுக்கு அறிவுரை கூறியும் அவர் கேட்காததை அடுத்து கடந்த மூன்றாம் தேதி காலை 11 மணியளவில் குடிப்பதற்கு பணம் கேட்டு அவருடைய தாய் விஜயாவை தர குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கூறி வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story