கடலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் தீ விபத்து

கடலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் தீ விபத்து
கடலூர் பகுதியில் தீ விபத்து

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் பகுதியில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தீபாவளி பட்டாசு வெடித்ததில் காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை, கடலூர், சிப்காட், பண்ருட்டி, வேப்பூர், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் தலா 1 பட்டாசு தீ விபத்தும், பண்ருட்டியில் 3 தீ விபத்து என கடலூர் மாவட்டம் முழுதும் 9 இடங்களில் குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Tags

Next Story