முத்தூர் குப்பை கிடங்கில் தீ விபத்து

முத்தூர் குப்பை கிடங்கில் தீ விபத்து

தீ விபத்து 

காங்கேயம் அருகே முத்தூர் பேரூராட்சி குப்பைக்கு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. வெள்ளகோவில் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

முத்தூர் ஈரோடு சாலை ரவுண்டானா அருகில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான காலி இடத்தில் மயானம் மற்றும் குப்பை கிடங்கு உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எறிய தொடங்கியது. இந்த தீ கோடை வெயில் உக்கிரத் தாக்கத்தினால் மளமளவென்று கொட்டிக் கிடந்த காய்ந்த குப்பை முழுவதும் வேகமாக பரவி பயங்கர தீ விபத்து ஏற்படுத்தியது.

மேலும் இந்த குப்பை தீ விபத்தில் ஏராளமான கரும்புகை சுற்றிலும் நாலாபுறமும் வேகமாக வெளியேறி பரவியது. இதனால் குப்பை கிடங்கு உள்ள சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முத்தூர் ஈரோடு சாலையில் வாகனத்தில் சென்ற இருசக்கர, கனரக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் தனசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

இந்த குப்பை கிடங்கில் ஏற்படுத்திய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் நேற்று நள்ளிரவு வரை ஈடுபட்டனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story