போடி மெட்டு மலை சாலையில் பற்றி எறிந்த கார் - உயிர் தப்பிய பயணிகள்

போடி மெட்டு மலைச்சாலையில் 17 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே கார் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது,நல்வாய்ப்பாக காரில் இருந்த பயணிகள் எந்த ஆபத்தும் இன்றி உயிர் தப்பினர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது போடி மெட்டு மலைச்சாலை. தமிழக கேரள எல்லை பகுதியை இணைக்கும் இந்த மலைச்சாலை சுமார் 21 கிலோமீட்டர் தொலைவும் 18 கொண்டை ஊசி வளைவுகளும் கொண்டது. தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் சுற்றுலாப் பயணிகளும் இடுக்கி மாவட்டம் வழியே கொச்சின் ஏர்போர்ட் செல்லும் பயணிகளும் இந்த வழியாக செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று05.06.24 மாலை சுமார் 3 மணி அளவில் மதுரையில் இருந்து கார்த்திக் ராஜா ராம்பிரகாஷ் வைஷ்ணவ் ஆகிய மூன்று நபர்கள் கொச்சின் ஏர்போர்ட்டிற்கு வெளிநாடு செல்வதற்காக போடி மெட்டு மலைச்சாலை வழியே பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் போடிமெட்டின் 17 வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென்று கார் நின்று விடவே காரை ஓட்டி வந்த கார்த்திக் ராஜா வண்டியை ஸ்டாட் செய்ய முயற்சிசெய்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக வண்டியின் எஞ்சினில் திடீரென்று குபுகுபுகுவென்று புகை கிளம்பியதுடன் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. அதனைக் கண்ட மூன்று நபர்களும் உடனடியாக காரை விட்டு இறங்கி தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்ட நிலையில் காரில் பரவிய தீ கார் முழுவதும் பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

உடனடியாக அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து நெருப்பை அணைக்க முயற்சி செய்த நிலையில் கார் முற்றிலும் இருந்து கூடாகிப் போனது. இதுகுறித்து குரங்கணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போடி மெட்டு மலைச்சாலையில் ஏற்கனவே நான்காவது கொண்டை ஊசி வளைவு அருகே சில மணி நேரத்துக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து கேரளா சென்று திரும்பிய கார் டிரைவரின் கவனக்குறைவால் 100 அடி பள்ளத்தில் வாகனம் விழுந்து விபத்து ஏற்பட்டு ஒரு நபர் குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் போடி மட்டும் மலைச் சாலையில் இரு வேறு வகை கார் விபத்து சம்பவங்கள் நடைபெற்றது குறித்து காவல்துறையினர் மலைச்சாலை வழியே வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story