வெங்காய காட்டுப் பகுதியில் தீ விபத்து!

வெங்காய காட்டுப் பகுதியில் தீ விபத்து!

தீ விபத்து 

நத்தம் அருகே வெங்காய குட்டில் காட்டுத்தீ 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திராப்பட்டி மலைப்பகுதியான வெங்காய காட்டுப் பகுதியில் இன்று மாலை திடீரென பற்றிய காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதைத் தொடர்ந்து தகவலறிந்த நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையில் வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு சென்று மளமளவென பிடித்துக் கொண்டிருந்த தீயை பரவாமல் சுமார் 4 மணி நேரம் போராடி அணைத்தனர். இதன் மூலம் அருகிலுள்ள குடியிருப்புகள் பாதுகாக்கப்பட்டு சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags

Next Story