பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து - புகை மூட்டத்தால் மூச்சு திணறல்

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து - புகை மூட்டத்தால் மூச்சு திணறல்

தீ விபத்து 

ஜெயங்கொண்டத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் உண்டாகிய கரும்புகை மூட்டத்தால் குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இந்திரா நகரை சேர்ந்த பாலவிக்னேஷ் சிதம்பரம் சாலையில் பழைய இரும்பு பிளாஸ்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு இந்திரா நகரில் சொந்தமான பழைய இரும்பு பிளாஸ்டிக் குடோன் உள்ளது. குடோனுக்கு அருகே பழைய பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக சேமித்து வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை பழைய பிளாஸ்டிக் பொருட்கள் பாட்டில்கள் உள்ளிட்டவற்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது லேசான காற்றும் இருந்ததால் தீ மள மள என பரவி கரும்புகை மூட்டத்துடன் எரிந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் மிகுந்த புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் தங்களது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினர்.மேலும் இது குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை போராடி அணைத்தனர். தீ விபத்தால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சத்துடன் பதட்டத்துடனும் காணப்பட்டனர்.

Tags

Next Story