தொழிற்சாலையில் தீ விபத்து : பல லட்சம் பொருட்கள் சேதம்

தொழிற்சாலையில் தீ விபத்து : பல லட்சம் பொருட்கள் சேதம்


கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு உட்பட்ட ஏற்றுமதி வளர்ச்சி தொழிற்பூங்காவில் உள்ள தனியார் தொழிற்சாலை யில் தீ விபத்து ஏற்பட்டது.


கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு உட்பட்ட ஏற்றுமதி வளர்ச்சி தொழிற்பூங்காவில் உள்ள தனியார் தொழிற்சாலை யில் தீ விபத்து ஏற்பட்டது.

"கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு உட்பட்ட ஏற்றுமதி வளர்ச்சி தொழிற்பூங்காவில், 'இன்ப்ரா இன்ஜினியர்ஸ்' என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இது, பழைய ஜே.சி.பி., ஹிட்டாச்சி உள்ளிட்ட இயந்திரங்களை புதுப்பிக்கும் தொழிற்சாலை. பொங்கல் விடுமுறையால் கடந்த மூன்று தினங்களாக தொழிற்சாலை இயங்கிவில்லை.இந்நிலையில், நேற்று மாலை தொழிற்சாலையில் ஸ்டோர் ரூமில் தீப்பிடித்தது. அங்கு பேரல்களில் இன்ஜின் மற்றும் ஹைட்ராலிக் எண்ணெய் இருந்ததால், மளமளவென ஸ்டோர் ரூம் முழுதும் தீ பரவியது.

கொளுந்துவிட்டு எரிந்த தீயின் அழுத்தம் காரணமாக மேற்கூரைகள் உடைந்து சிதறின. தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தீயணைப்பு வீரர்கள், இரண்டரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த திடீர் தீ விபத்தால், சிப்காட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள், இன்ஜின்கள், எண்ணெய் பேரல்கள் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story