கொடைக்கானல் மலை சாலையில் தீ விபத்து

கொடைக்கானல் மலை சாலையில் தீ விபத்து

கொடைக்கானல் மலைசாலையில் தீ விபத்து

கொடைக்கானல் ப‌ழ‌னி பிர‌தான ம‌லைச்சாலையில் ஜீவா ந‌க‌ர் அருகே சாலையின் ஓர‌த்தில் உள்ள வ‌ருவாய் நில‌ங்க‌ளில் பற்றி எரியும் தீயால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவுவதால் புற்கள்,புதர்கள், செடி,கொடிகள் முழுவதும் காய்ந்து காண‌ப்ப‌டுகிறது,இதன் காரணமாக வனப்பகுதி,வருவாய் நிலங்க‌ள் உள்ளிட்ட பகுதிகளில் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது, இந்நிலையில் கொடைக்கானல் ப‌ழ‌னி பிர‌தான‌ ம‌லைச்சாலையில் ஜீவா ந‌கர் அருகே சாலையின் ஓர‌த்தில் தீ ப‌ற்றி கொழுந்து விட்டு எரிந்து வருகிறது,

மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி சாலையின் ந‌டுப்ப‌குதி வ‌ரை எரிந்து வருவதால் இப்பகுதி முழுவ‌தும் புகை ம‌ண்ட‌ல‌மாக‌ காட்சிய‌ளிக்கின்ற‌து, மேலும் இந்த‌ சாலையில் ப‌ய‌ண‌ம் செய்யும் வாக‌ன‌ ஓட்டுன‌ர்க‌ள் அச்ச‌த்துட‌னே இந்த‌ சாலையை க‌ட‌க்கும் சூழலும் ஏற்ப‌ட்டுள்ள‌து, மேலும் இந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீய‌ணைப்புதுறையின‌ரும், வ‌ன‌த்துறையின‌ரும் த‌ற்போது வ‌ரை ஈடுப‌ட‌வில்லை.

தீ தொட‌ர்ந்து எரிந்து வ‌ருவ‌தால் அருகே உள்ள வ‌ன‌ப்பகுதிக்குள்ளும் தீ ப‌ர‌வும் சூழ‌லும் ஏற்ப‌ட்டுள்ள‌து,மேலும் இந்த தீயை க‌ட்டுப்ப‌டுத்த‌ வ‌ன‌த்துறையினர் முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ள‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

Tags

Next Story