கல்குவாரியில் தீ விபத்து

கல்குவாரியில் தீ விபத்து

கல்குவாரியில் ஏற்பட்ட தீயிலிருந்து வெளியேறிய கரும்புகையால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்தனர்


கல்குவாரியில் ஏற்பட்ட தீயிலிருந்து வெளியேறிய கரும்புகையால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்தனர்.
ஈரோடு அருகே தொட்டம்பட்டியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பழைய கல் குவாரி செயல்பட்ட இடத்தில் சுமார் 70 அடி ஆழத்தில் கல் குழி உள்ளது.பயன்படுத்தாமல் உள்ள இந்த கல்குழியில் கழிவுகளை சிலர் கொட்டியுள்ளனர். இந்த நிலையில் இன்று இரவு கல்குழியில் கொட்டப்பட்ட கழிவுகள் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது இதனை கண்ட அப்பகுதியினர் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். கல்குழியில் கொட்டப்பட்ட கழிவுகள் பற்றி எரிவதால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகினர். கல் குழியில் ஆழம் அதிகமாக இருப்பதாலும் இரவு நேரம் என்பதாலும் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் 4 மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர் வருகின்றனர்.

Tags

Next Story