சேலம் கூட்டுறவு சங்க குடோனில் தீ விபத்து

சேலம் கூட்டுறவு சங்க குடோனில் தீ விபத்து
சேலம் கூட்டுறவு சங்க குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு உண்டானது.

சேலம் சீத்தாராமன் செட்டி தெருவில் பொன்னி கூட்டுறவு சங்க குடோன் உள்ளது. இந்த குடோனில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட தானிய வகை பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த குடோனுக்கு அருகே உள்ள ஜெனரேட்டர் அறையில் இருந்து நேற்று காலை திடீரென கரும்புகை வெளியேறியது. பின்னர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக ஜெனரேட்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். குடோன் அருகில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. ஆனால் தீயை உடனடியாக அணைத்ததால் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இருப்பினும், இந்த தீ விபத்து குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story