புதுக்கோட்டையில் நகராட்சிக்கு சொந்தமான கழிவு பொருட்கள் கொட்டும் இடத்தில் பயங்கர தீ...

புதுக்கோட்டையில் நகராட்சிக்கு சொந்தமான கழிவு பொருட்கள் கொட்டும் இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.
புதுக்கோட்டை அருகே சண்முகாநகர் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது இதன் அருகில் நகராட்சிக்கு சொந்தமான மூன்று ஏக்கர் பரப்பளவில் நகராட்சி பகுதிகளில் வெட்டப்படும் மரங்கள் கழிவு பொருட்கள் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. பின்னர் இங்கு கொட்டும் மர இலைகள் இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இடத்தில் இன்று மாலை திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. பின்னர் அந்த தீ பரவி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின்படி விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிக அளவிலான மரங்கள் தீப்பிடித்து எறிந்ததால் தீயை அணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. மேலும் தீயணைப்புத் துறையினர் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது...

Tags

Next Story