தீ விபத்தால் பாதிப்பு - எம்.எல்.ஏ நிவாரணம்

X
நிவாரண உதவி
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி நிவாரண உதவி வழங்கினார்.
பள்ளிபாளையம் ஆண்டி காடு விநாயகர் கோயில் பின்புறம், கணேசன் லைன் பகுதியில் கலைவாணி (62).மில் தொழிலாளி பணிபுரிந்து வருபவரும் நிலையில்,அவருடைய இல்லத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தால் முழுமையாக சேதம் அடைந்தது. முன்னாள் அமைச்சரும்,குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி சேதங்களை பார்வையிட்டு அவருக்கு உதவித்தொகை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். மேலும் தீ விபத்தால் சேதம் அடைந்த ஆவணங்கள் பெற்று தர ஆவண செய்வதாகவும் தெரிவித்தார். பள்ளிபாளையம் நகர அதிமுக செயலாளர் பி.எஸ்.வெள்ளிங்கிரி, அம்மா பேரவை செயலாளர் டி.கே.சுப்பரமணி நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ், நகர மன்ற உறுப்பினர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story
