பட்டாசு கடைகளில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் திடீர்  ஆய்வு.

பட்டாசு கடைகளில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் திடீர்  ஆய்வு.

அதிகாரிகள் ஆய்வு 

நாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பட்டாசு கடைகளில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வுகளை பல்வேறு மாவட்டங்களில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சேலம் மாநகர தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் சுரேஷ் தலைமையில் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இயங்கி வரக்கூடிய பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது முறையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு விற்பனை செய்து வரும் கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பட்டாசு கடைகளில் தீ தடுப்பு சாதனம் வைக்கப்பட வேண்டும், குடிநீர் தொட்டி வைக்க வேண்டும் தீ விபத்து ஏற்படாதவாறு முறையான பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். சேலம் செவ்வாபேட்டை பகுதியில் 50க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை பட்டாசு கடைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story