உயிருக்கு போராடிய பருந்தை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்

உயிருக்கு போராடிய பருந்தை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்

தீயணைப்புதுறை

ராமேஸ்வரம் கோவில் ராஜ கோபுர கலசத்தில் உள்ள இடிதாங்கியில் சிக்கி உயிருக்கு போராடிய பருந்து: 100 அடி உயரமுள்ள ராஜ கோபுரத்தின் மீது ஏறிய தீயணைப்பு வீரர் பருந்தை காப்பாற்றிய நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் ராஜ கோபுர கலசத்தின் உள்ள இடிதாங்கியில் சிக்கி உயிருக்கு போராடிய பருத்தை தீயணைப்புதுறை வீரர் பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மீண்டும் பறக்க விட்டனர். ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் காசிக்கு நிகரான கோயில் என்பதால் தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் தமிழக மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் இருந்தும் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். ராமேஸ்வரம் திருக்கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை ஒட்டி கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றப்பட்டு 12 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை ஒட்டி ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ள நான்கு ராஜகோபுரங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் கிழக்கு ராஜகோபுரம் கோபுரத்தின் கலசத்தின் அருகே அமைந்துள்ள இடிதாங்கியில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகளுக்கான வயரில் பருந்து ஒன்று சிக்கிக்கொண்டு உயிரிக்கு போராடியுள்ளது. இதனைக் கண்ட திருக்கோயில் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 100 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தின் மேல் ஏறி கலசத்தின் அருகே உள்ள இடிதாங்கில் சிக்கிக் கொண்டிருந்த பருந்தை தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரம் போராடி பத்திரமாக உயிருடன் மீட்டு அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்து மீண்டும் பறக்க விட்டனர். 100 அடி உயரம் உள்ள ராஜகோபுரத்தில் சிக்கிக் கொண்ட பருந்தை பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மீண்டும் பறக்க விட்ட தீயணைப்பு வீரர்களின்செயல் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story