மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை பயிற்சி

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை பயிற்சி

தீயணைப்பு ஒத்திகை

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பாக மருத்துவமனை கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்து தொடர்பான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தீ விபத்து போன்ற அவசர காலங்களில் அவசர வழிகளை எவ்வாறு பயன்படுத்துவது, புகை சூழ்ந்த அறைகளில் உள்ள நோயாளிகளை அவ்விடத்திலிருந்து எவ்வாறு வெளியே கொண்டு வருவது, மருத்துவமனையில் உள்ள தீயணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற செயல்முறை விளக்கம் தீயணைப்பு வீரர்களால் செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவமனையில் உள்ள அனைத்து தீயணைப்பு சாதனங்களையும் உதவி மாவட்ட அலுவலர் நாகராஜன் ஆய்வு செய்து மருத்துவமனை பணியாளர்களிடம் கூறுகையில் இங்கு உள்ள தீயணைப்பு சாதனங்கள் அனைத்தும் நல்ல முறையில் பொருத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story