வெல்டிங் வைக்கும் போது தீ விபத்து - லாரி எரிந்து சேதம்

செட்டிக்கரை அருகே வெல்டிங் வைக்க சென்றபோது ஏற்பட்ட தீ விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது.

தருமபுரி அருகே செட்டிக்கரையை அடுத்த பள்ளகொல்லையைச் சேர்ந்தவர் ஜெயராமன் இவர் சொந்தமாக ஒரு டாரஸ் லாரியை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த லாரியில் செங்கல் சூளையில் செங்கல் பாரம் ஏற்றி இறங்கி வருவது வழக்கம்.இந்த நிலையில் லாரியில் ஏற்பட்ட சிறு பழுது காரண மாக வெல்டிங் வைப்பதற்காக நேற்று வண்டியை குண்டல்பட்டி மேட்டில் உள்ள ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் பட்டறைக்கு லாரியை கொண்டு வந்தார்.

இதைத்தொடர்ந்து ஜெயராமன் தனது வண்டியை பட்டறைக்கு வெளியே சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு பழுதை சரிசெய்வதற்காக ரமேஷ் வெல்டிங் வைத்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென்று லாரியில் தீப்பிடித்து கொண்டது. அந்த தீ மளமளவென பரவி வண்டி முழுவதும் பற்றிக் கொண்டது. உடனே ஜெயராமன் தருமபுரி தீயணைப்புத் துறையினருக்கும், மதிகோண்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி பற்றி கொண்ட தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் லாரி முழுமையாக எரிந்து சேதமானது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.இந்த சம்பவம் குறித்து ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் மதிகோண் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story