காட்டு தீ மளமளவென எரிவதால் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து சேதம்
காட்டுத்தீ
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவுவதால் புற்கள்,புதர்கள், செடி,கொடிகள் முழுவதும் காய்ந்துள்ளன,மேலும் வெப்பம் தொடர்வதால் சில நாட்களாக வனப்பகுதி,வருவாய் நிலம் உள்ளிட்ட பகுதிகளில் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது, இந்நிலையில் கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வடகவுஞ்சி வனப்பகுதியில் காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது,
மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி பல ஏக்கர் பரப்பளவில் தீ பற்றி எரிந்து வருகிறது, இதனால் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து சேதம் அடைவதுடன்,வன விலங்குகளும் வனப்பகுதியை விட்டு வன விலங்குகள்,பறவை இனங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகிறது.
மேலும் இந்த தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் தீ தொடர்வதால் இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது, மேலும் இந்த தீயானது நாளை அதிகாலைக்குள் முழுவதும் கட்டுப்படுத்தப்படும் என வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.