இனயம் புத்தன் துறையில் பைபர் படகுகளில் தீ விபத்து

இனயம் புத்தன் துறையில் பைபர் படகுகளில் தீ விபத்து
கடற்கரை கிராமத்தில் எரிந்த பைபர் வள்ளம்
இனயம் - புத்தன்துறை கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகுகள் தீ பிடித்து எரிந்தது குறித்து மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்திற்கு உட்பட்ட பகுதியில் ராமன்துறை ,இனயம் புத்தன்துறை ஆகிய கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவ மக்கள் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களை மீன்பிடித்த பின், கடற்கரை கிராமங்களில் ஓரத்தில் ஒதுக்கி விடுவது வழக்கம். அதன்படி கடந்த 4-ம் தேதி ராமன் துறை கடற்கரை கிராமத்தை சேர்ந்த ராபர்ட் என்பவர் தனக்கு சொந்தமான வள்ளத்தில் மீன் பிடித்து விட்டு வந்து வள்ளத்தை கடற்கரையில் ஒதுக்கி விட்டிருந்தார். இந்த வள்ளம் திடீரென தீப்பிடி எரிந்துள்ளது. இதை போல் நேற்று முன்தினம் இனயம் - புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் 15க்கு மேற்பட்ட பைபர் வள்ளங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவைகளும் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதை கண்ட மீனவ மக்கள் குழித்துறை தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இது தொடர்பாக உரிமையாளர்கள் புதுக்கடை போலீஸ் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீன்வளத் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

Tags

Next Story