காப்பு காட்டில் தீ விபத்து - காரணமானவர் கைது
சிவராஜ்
நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கீழ்கோத்தகிரி வனச்சரகத்தில் கூடக்கல் காப்புக் காட்டில் கடந்த 7ம் தேதியன்று திடீரென காட்டுத்தீ ஏற்ப்பட்டது.இதில் சுமார் 3 ஹெக்டர் பரப்பளவில் வனப்பகுதி தீயில் கருகி நாசமாகின. இது தொடர்பாக கீழ் கோத்தகிரி வனச்சரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் பத்து மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் கௌதம் அறிவுறுத்தலின் படி கீழ் கோத்தகிரி வனச்சரகர் ராம்பிரகாஷ் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு நெருப்பு உருவாக காரணம் யார் என்ற கோணத்தில் விசாரணை மேற்க் கொள்ளப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து மேற்க்கொண்டனர். அப்போது அவ்வழியாக சென்ற தாளமொக்கை பகுதியை சேர்ந்த சிவராஜ், 36 என்பவரை விசாரணை செய்ததில் தீ பற்றக்காரணமாக இருந்ததை ஒப்புக்கொண்டார். மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்து கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிவராஜ் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.