16 அடி நீளம் கொண்ட அலகு காவடியுடன் தீ மிதி திருவிழா

16 அடி நீளம் கொண்ட அலகு காவடியுடன் தீ மிதி திருவிழா

மயிலாடுதுறை அருகே விஜயநகர் மேல மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவத்தில் 16 நீளம் கொண்ட அலகு காவடிகளுடன் பக்தர்கள் தீமிதித்தனர்

மயிலாடுதுறை அருகே விஜயநகர் மேல மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவத்தில் 16 நீளம் கொண்ட அலகு காவடிகளுடன் பக்தர்கள் தீமிதித்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா விளநகர் பகுதியில் உள்ள மேல மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது. நூறாண்டுகளை கடந்தும் இக்கோவிலில் தீமிதி திருவிழா தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. காவிரி கரையிலிருந்து மேள தாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பாடு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியதை தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து 16 அடி நீளம் கொண்ட அலகு காவடிகளுடன்‌ பக்தர்கள் தீமிதித்த காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது.

Tags

Next Story