துவரங்குறிச்சி அருகே மலைக் குன்றில் தீ

துவரங்குறிச்சி அருகே மலைக் குன்றில் தீ
X

மலைகுன்றில் தீ விபத்து

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே மலை குன்றில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருங்காபுரி ஒன்றியம், செவல்பட்டி ஊராட்சி லிங்கம்பட்டி கிராமத்தில் உள்ள கிளாமரத்த குட்டு என்னும் குன்றில் கிடந்த காய்ந்த சருகுகளில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. சுமாா் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக எரிந்த தீ தொடா்ந்து பரவத் தொடங்கியது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற நிலைய அலுவலா் மனோகா் மற்றும் நாகேந்திரன் தலைமையிலான துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினா், கிராம இளைஞா்கள் உதவியுடன் சிறிதுநேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

Tags

Next Story