மின்மாற்றியின் பக்கவாட்டில் தீ விபத்து

மின்மாற்றியின் பக்கவாட்டில் தீ விபத்து

மின்மாற்றியில் தீ விபத்து

குமாரபாளையம் சேலம் சாலையில் அமைந்துள்ள பவர் ஹவுஸ்  மின்மாற்றியின் பக்கவாட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
குமாரபாளையம் சேலம் சாலையில் குளத்துகாடு பகுதியில் பவர் ஹவுஸ் அமைந்துள்ளது. இதன் வெளிப்புறமாக மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றியின் கீழ் பகுதியில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10:00 மணியளவில் குப்பையில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, மின் மாற்றியை சுற்றிலும் எரிந்தது. இதனால் மின்மாற்றி முழுவதும் தீயில் எரிந்து மிகப்பெரிய விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் குமாரபாளையம் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில், தீ விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்ற குமாரபாளையம் தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து மிகப்பெரிய விபத்தினை தடுத்தனர்.

Tags

Next Story