தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம் - திருச்சியில் துவக்கி வைப்பு

தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம் - திருச்சியில் துவக்கி வைப்பு
X
விழிப்புணர்வு பிரச்சாரம்
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரின் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம் திருச்சியில் துவக்கி வைக்கப்பட்டது.
திருச்சியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரும், சமூக ஆர்வலரும் சித்த வைத்தியருமான டி.எஸ்.பி.என்கிற சீனிவாசபிரசாத் திருச்சி -பாண்டிச்சேரி வரையிலான 2023 ஆண்டு நடமாடும் உயிர்காக்கும் சேவை வாகனம் மூலம் சாலை பாதுகாப்பு, சாலை பயண பாதுகாப்பு, வாகன தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம் செய்ய உள்ளார். இதன் துவக்க நிகழ்ச்சி திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திலிருக்கும் காவல்துறை காவல் துணை ஆணையர் அலுவலகம் முன்பு நடந்தது. இப்பயணத்தை திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் அன்பு. போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ஜோசப் நிக்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவரும் திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான கோவிந்தராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story