மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு
தீ தடுப்பு மற்றும் தீ விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கான நினைவு கூறும் நிகழ்வுவாக தீ தொண்டு வார விழா நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை தீ தொண்டு வாரமாக நடைபெற்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கான "நாட்டில் கட்டமைப்பை பேணி காப்பதற்கு தீத்தெடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்வோம் என்ற கொள்கையை கொண்டு தீ கொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் மதுராந்தகம் தீ மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் நிலைய அலுவலர் திருமலை தலைமையில் தீ தடுப்பு குறித்து மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உதவி அலுவலர் சீனிவாசன் மற்றும் தீ அணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.