சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி...

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி...

விழிப்புணர்வு பயிற்சி

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் நடந்தது.
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் நடந்தது. விழாவிற்கு வந்தவர்களை கல்லூரியின் முதல்வர் பேகம் பாத்திமா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ரிலையன்ஸ் தீத்தடுப்பு பாதுகாப்பு அலுவலர் ஆர்.பெருமாள் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தீ பரவுவதும், அதை தடுப்பதுமான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தீ எவ்வாறு எல்லாம் பிடிக்கும், அதன் 5 விதமான தீப்பற்றும் வழிமுறைகளை கூறி அதை எவ்வாறு தடுப்பது என்றும், அறையின் உள்பக்கத்தில் தீப்பிடித்தால் எந்தவிதமான தடுப்பு மேற்கொள்வது என்றும், அறையின் வெளிப்பக்கத்தில் தீப்பிடிக்கும் போது எவ்வாறு தடுப்பது என்றும் கூறி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கல்லூரியின் டீன் டி.என்.கீதா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் பேரிடர் மேலாண்மை குழு செய்திருந்தது.

Tags

Read MoreRead Less
Next Story