அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

தீ தடுப்பு ஒத்திகை

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துமவனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், பாதுகாவலர்களுக்கான தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், ஏப்., 14 - 20 வரை தீத்தொண்டு நாள் வார விழா அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீத்தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துமவனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், பாதுகாவலர்களுக்கான தீத்தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது.

இதில், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏன் ஏற்படுகிறது. அதை எவ்வாறு தடுப்பது, தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வது, எளிய முறையில் தீயை அணைப்பது குறித்து, தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கத்துடன் பாதுகாப்பு ஒத்திகை செய்து காண்பித்தனர்.

மருத்துவமனை ஊழியர்களுக்கு ஏற்பட்ட தீ விபத்து சம்பந்தமான வினாக்களுக்கு விடையளித்தனர். தீ விபத்து ஏற்பட்டால், காஞ்சிபுரம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தை 112, 102, 044- 27222899, 94450 86141 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story