விழுப்புரம் நீதிமன்றத்தில் தீ தடுப்பு ஒத்திகை

விழுப்புரம் நீதிமன்றத்தில் தீ தடுப்பு ஒத்திகை

 விழுப்புரம் நீதிமன்றத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.

விழுப்புரம் நீதிமன்றத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் அடிப்படை தீயணைப்புப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் விழுப்புரம் உதவி மாவட்ட அலுவலா் கே.சிவசங்கரன் தலைமையில், விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனா்.

இதில், திடீரென தீ விபத்து நிகழ்ந்தால் தீயை அணைக்கும் முறைகள், பாதுகாப்பாக அறைகளிலிருந்து வெளியேறுவது என்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் செய்து காண்பித்தனா். தொடா்ந்து, நீதிமன்ற ஊழியா்களுக்கு அடிப்படை தீயணைப்புப் பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது.நிகழ்வில், முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, மாவட்ட நீதிபதிகள் ஏ.பாக்கியஜோதி, எம்.இளவரசன், எம்.வினோதா, தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் எம்.புஷ்பராணி, கூடுதல் சாா்பு நீதிபதி எண்- 1 ஏ.தமிழ்ச்செல்வன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா்.முருகன் உள்ளிட்ட நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story