திருப்பத்தூரில் தீ தடுப்பு போலி ஒத்திகை மற்றும் தீ தொண்டு பிரச்சாரம்

திருப்பத்தூரில் தீ தடுப்பு போலி ஒத்திகை மற்றும் தீ தொண்டு பிரச்சாரம்

தீ தடுப்பு ஒத்திகை

திருப்பத்தூரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் தீ தடுப்பு போலி ஒத்திகை மற்றும் தீ தொண்டு பிரச்சாரம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சேர்மன் லட்சுமணன் தெரு பகுதியில் உள்ள திருப்பத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முருகன் தலைமையில் புதன்கிழமை இன்று மதியம் ஒரு மணி அளவில் தீ தடுப்பு போலி ஒத்திகை மற்றும் தீ தொண்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு திடீரென தீ பற்றிய அறிந்தால் அதை எவ்வாறு கையாள வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர். இதில் திருப்பத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story