ஆத்தூர் : அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு போலி ஒத்திகை விழிப்புணர்வு !

ஆத்தூர் : அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு போலி ஒத்திகை விழிப்புணர்வு !

விழிப்புணர்வு

ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீயணைப்புத் துறையினர் மருத்துவர்கள், செவலியர்கள், பணியாளர்களுக்கு தீ தடுப்பு போலி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு தலைமை மருத்துவமனையில் தீயணைப்புத் துறையினர் மருத்துவர்கள், மருத்துவ செவிலியர்கள், பணியாளர்கள், நோயாளிகளுடன் வரும் உறவினர்களுக்கும் பொதுமக்களுக்கு தீ தடுப்பு போழி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு தலைமை மருத்துவமனைக்கு உள் நோயாளிகள் புற நோயாளிகள் கர்ப்பிணிப் பெண்கள் சர்க்கரை நோயாளிகள் என அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவது வழக்கம் மேலும் இந்த மருத்துவமனை வளாகப் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் போலி ஒத்திகை பயிற்சியின் மூலம் செயற்கையாக, தீயை உருவாக்கி, அதை பாதுகாப்பாக அணைப்பது குறித்தும் , மருத்துவமனை வார்டு பகுதியில் கேஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், மேலும் மருத்துவமனை வளாகப் பகுதி உள்ளிட்ட இடங்களில் திடீரென எதிர்பாராத வகையில் தீ விபத்தில் சிக்கினால் எப்படி தப்பிக்க வேண்டும் தீயை அணைக்க உடனடியாக செய்ய வேண்டியது செய்யக் கூடாதது தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள் போன்றவற்றை குறித்து மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் பணியாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த போலி ஒத்திகை நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் பங்கேற்று தீ தடுப்பு முறைகளை செய்து பார்த்தனர் . இந்தப் போலி ஒத்திகை பயிற்சி மருத்துவமனை வளாகத்திற்கு உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளுக்கான பார்வையாளர்களும் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கண்டுகளித்தனர் அவர்களுக்கு துண்டு பிரசாரமும் தீயணைப்புத் துறை சார்பாக வழங்கப்பட்டது.

Tags

Next Story