வனத்துறை சார்பில் தீத்தடுப்பு கருத்தரங்கம்
தம்மம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் நடந்த வனப்பகுதியில் ஏற்படும் திடீர் தீவிபத்தை தடுப்பு குறித்து கருத்தரங்கில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி வனத்துறை அலுவலகத்தில், வனப்பகுதியில் ஏற்படும் திடீர் தீவிபத்தை தடுப்பு குறித்து, கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் வனத்துறையினர், மருத்துவம், வேளாண்மை, வருவாய், தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள், தீ தடுப்பு மற்றும் விழிப்பு ணர்வு ஒத்திகை பயிற்சியை செய்து காட்டினர். இதில் தம்மம்பட்டி வனசரகர் முருகேசன், வனவர் சிலம்பரசன், ராமகிருஷ்ணன். தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவர் வனிதா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story