வனப்பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி
தீ தடுப்பு பயிற்சி
கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கோடை வெயில் காரணமாக கட வறட்சி நிலவி வருகிறது.நீரோடைகள் காய்ந்துள்ள நிலையில் ஆங்காங்கே வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு கட்டுப் படுத்தினாலும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து சில நாட்களாக காட்டுத் தீ எரிந்து வருகிறது.
இதில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த நான்கு நாட்களாக காட்டுத்தில் எரிந்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரவு பகலாக பணியாற்றி வரும் நிலையில் தீ காட்டுக்குள் வராத காரணத்தால் ராணுவ ஹெலிகாப்டர்கள் உதவியோடு தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் காட்டுத் தீ பிடிக்க அதிக வாய்ப்புள்ளதால் வனத்துறையினருக்கு காட்டுத் தீ கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் கோவை வனக் கோட்டத்தில் உள்ள வனப் பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சூழல் ஆர்வலர்கள் ஆகியோருக்கு தீ தடுப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் இந்த பயிற்சியானது வழங்கப்பட்டது.இதில் 50க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் சூழலியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.சமதளப் பகுதியில் தீ பிடித்தால் எவ்வாறு அனைப்பது மலைப்பகுதியில் தீப்பிடித்தால் எவ்வாறு அனைப்பது என்பது குறித்த பயிற்சியும் ட்ரோன் மூலம் தீயை அணைப்பது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டது.