முன்னாள் முதல்வரை சந்தித்த பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள்

முன்னாள் முதல்வரை சந்தித்த  பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள்
சிவகாசி: முன்னாள் முதல்வரை சந்தித்த தமிழ் நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள்...
சிவகாசியில் முன்னாள் முதல்வரை தமிழ் நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

சிவகாசி தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகை புரிந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ் நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

விருதுநகர் மாவட்டம், 2024 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த மாதம் ஏப்ரல்19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் பணியில் பல்வேறு கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.தொடர்ந்து கட்சி தலைவர்கள் பிரச்சாரத்திலும் வேட்பாளர்களை ஆதரித்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 24ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.அதிமுக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில்போட்டியிடும் விஜயபிரபாகரனை ஆதரித்து சிவகாசி பாவாடிதோப்பு திடலில் இன்று மாலை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக முன்னாள் அமைச்சரும்,விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான ராஜேந்திரபாலாஜி சால்வை அணிவித்து வரவேற்றார்.பின்னர் ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டில் சிவகாசி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள்,பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டு வரும் பிரச்சனைகள் குறித்து, எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சரவெடி பின்னுவதற்கும், பேரியம் நைரேட் என்று சொல்லக்கூடிய பச்சை உப்பை பயன்படுத்துவதற்கும்,தடையில்லாமல் பட்டாசுகளை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.பட்டாசு உற்பத்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி என்றும் பட்டாசு தொழிலுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags

Next Story