பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் போராட்டம் தொடரும்

தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தொடங்கிய வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என சங்கத்தின் செயலாளர் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்துவதாக கூறி ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக கூறி கடந்த 24ஆம் தேதி தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தொடங்கிய வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த சங்கத்தின் செயலாளர் மணிகண்டன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச்சுவார்த்தை விடுபட்ட பின்பு பேட்டி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதை கண்டித்து தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் கடந்த 24 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இச்சங்கத்தின் கீழ் இயங்கும் 150 பட்டாசு ஆலைகளை மூடப்பட்டுள்ள நிலையில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைஇல்லாமல் தனது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் உடன் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை சந்தித்து மனு அளிக்க வந்தனர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆய்விற்கு எந்தவித பட்டாசு உரிமையாளர்களும் அஞ்சி ஓட வில்லை எனவும் ஆய்வு நடத்தி விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதனால் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகளை பலதரப்பட்ட நபர்களுக்கு குத்தகைவிடும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு சங்கம் உறுதுணையாக இருக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டாசு ஆலைகளில் நடத்தப்படும் ஆய்வு நேர்மையாக இருக்க வேண்டும் எனவும் தங்களுடைய கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றினால் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் மாவட்ட ஆட்சியரின் இன்றைய பேச்சு வார்த்தை தரப்பட்ட பதில் தங்களுக்கு போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் வேலைநிறுத்தம் தொடரும் என சங்கத்தின் செயலாளர் மணிகண்டன் செய்தியாளர்களும் கூறினார்.

Tags

Next Story