சிவகாசி: ரூ 50 லட்ச மதிப்பிலான சரவெடி பறிமுதல்

சிவகாசி: ரூ 50 லட்ச மதிப்பிலான சரவெடி பறிமுதல்
சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட ரூ 50 லட்ச மதிப்பிலான சரவெடி மற்றும் பட்டாசுகள் பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்த வருவாய் துறையினர்.....
சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட ரூ 50 லட்ச மதிப்பிலான சரவெடி மற்றும் பட்டாசுகளை பறிமுதல் செய்து வருவாய்த்துறையினர் குடோனுக்கு சீல் வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நெடுங்குளம் கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த விஸ்வநாத்சங்கர் என்பவருக்கு சொந்தமான சித்த விநாயாக என்ற பெயரில் டிரான்ஸ்போர்ட் செயல்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்போர்ட் எந்த ஒரு அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக பட்டாசுகளை டிரான்ஸ்போர்ட் செய்யும் பணி நடைப்பெற்று வந்தன.

மேலும் இந்த குடோனுக்கு தீப்பெட்டி மற்றும் பட்டாசு தனி தாசில்தார் திருப்பதி மற்றும் தாசில்தார் வடிவேல்,ஆகிய தனி குழு ஆய்வு செய்த போது குடோன் முழுவதம் சட்டவிரோதமாக பல தரப்பட்ட பட்டாசு வெடிகள் 2706 கேஸ் பெட்டிகளும்,உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட 276 கேஸ் பெட்டி சரவெடிகள்,டிரான்ஸ்போர்ட் குடோனுக்கு லோடு ஆட்டோவில் வந்த சரவெடி பட்டாசுகளையும் ஆட்டோவையும் பட்டாசு ஆய்வு குழுவினர் பறிமுதல் செய்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குடோனுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

பறிமுதல் செய்த பட்டாசுகளின் மொத்த மதிப்பு ரூ 50 லட்சம் இருக்குமென வருவாய் துறையினர் தெரிவித்தனர். பறிமுதல் செய்த லோடு ஆட்டோவை வருவாய் துறையினர் எம்.புதுப்பட்டி காவல்துறையனரிடம் ஒப்படைத்து டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் விஸ்வநாத்சங்கர் மீது நெடுங்குளம் VAO பாண்டியராஜன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story