தீத்தொண்டு நாள்: தீயணைப்புப் படை வீரா்களுக்கு அஞ்சலி!

தீத்தொண்டு நாள்: தீயணைப்புப் படை வீரா்களுக்கு அஞ்சலி!

தூத்துக்குடியில், தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீத்தொண்டு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.


தூத்துக்குடியில், தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீத்தொண்டு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் தீயணைப்பு துறை சாா்பில் தீவிபத்து- மீட்புப் பணியின்போது வீரமரணமடைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தீத்தொண்டு நாள் ஆண்டுதோறும் ஏப். 14இல் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடியில் உள்ள நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பணியின்போது உயிரிழந்த அலுவலா்கள், பணியாளா்களின் நினைவாக அங்குள்ள நினைவு ஸ்தூபிக்கு மாவட்ட அலுவலா் மனோ பிரசன்னா மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

இதுகுறித்து மாவட்ட அலுவலா் கூறும்போது, ஆண்டுதோறும் மத்திய அரசால் ஒவ்வொரு தலைப்பின் அடிப்படையில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு ‘நாட்டின் கட்டமைப்பைப் பேணிக் காப்பதற்கு, தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதனை உறுதிசெய்வோம்’ என்ற தலைப்பில் இம்மாதம் 20ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஒரு வாரத்துக்கு பொதுமக்கள் கூடுமிடம், தொழிற்சாலைகள், குடிசைப் பகுதிகளுக்கு சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

தீத்தடுப்பு குறித்து சொற்பொழிவு, துண்டுப் பிரசுர விநியோகம், மாதிரிப் பயிற்சி நடத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படும் என்றாா். நிகழ்ச்சியில் உதவி மாவட்ட அலுவலா்கள் ராஜு, நட்டாா் ஆனந்தி, தூத்துக்குடி நிலைய அலுவலா் (போக்குவரத்து) அருணாசலம், தீயணைப்பு வீரா்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினா்.

Tags

Read MoreRead Less
Next Story