சேற்றில் சிக்கிய பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
பாபநாசம் அருகே பட்டவர்த்தி குளத்தில் பசுமாடு சேற்றில் சிக்கியது தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் பசுமாட்டை உயிருடன் மீட்டனர் .
பாபநாசம் அருகே பட்டவர்த்தி குளத்தில் பசுமாடு சேற்றில் சிக்கியது தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் பசுமாட்டை உயிருடன் மீட்டனர் . தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பட்டவர்த்தி கிராமத்தில் தெற்கு தெருவில் வசித்து சண்முகம் மனைவி திலகவதி வயது 45 இவருக்கு சொந்தமான பசுமாடு அதே கிராமத்தில் மேய்ந்து கொண்டிருந்தது அப்போது அங்கே வீட்டிற்கு அருகே உள்ள குளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக பசு மாடு இறங்கி சென்றுள்ளது. தண்ணீரை குடிக்கும் போது அங்கு சேற்றுக்குள் பசுமாடு சிக்கிக் கொண்டது உடனே பசு மாட்டின் உரிமையாளர்களும் கிராம மக்களும் பசுமாட்டை காப்பாற்ற போராடி உள்ளனர் அதில் அந்த பசு மாடு சுமார் 300 கிலோ எடை இருந்ததால் அதை சேற்றில் இருந்து தூக்க முடியவில்லை உடனடியாக பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு பாபநாசம் தீயணைப்பு நிலைய பொறுப்புஅலுவலர் முருகானந்தம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சேற்றில் சிக்கி இருந்த பசு மாட்டை கயிறு மூலம் கட்டி அந்த மாட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர் .
Next Story