கிணற்றில் விழுந்து இரண்டு நாட்களாக உயிருக்கு போராடிய பசுமாடு !
பசுமாடு
கிணற்றில் விழுந்து இரண்டு நாட்களாக உயிருக்கு போராடிய பசுமாடு ஒன்றை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராம் பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம். இவருக்கு சொந்தமான பசு மாடு தினமும் காலையில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு மாலையில் திரும்புவது வழக்கம். அந்த பசு மாடு கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்கிருந்து வழி தவறி கண்ணன் குளம் ஊருக்கு வந்தது. அங்குள்ள தோட்டம் ஒன்றில் மேய்ந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதனை யாரும் கவனிக்காததால் இரண்டு நாட்களாக பசுமாடு கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் பசுமாடு வீட்டுக்கு வராததால் ஆபிரகாம் பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதனிடைய நேற்று அந்த வழியாக சென்ற விவசாயி ஒருவர் கிணற்றில் பசு மாடு உயிருக்கு போராடுவதை கண்டு உடனடியாக கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பசுமாட்டை மீட்டனர். தொடர்ந்து பசு மாட்டின் உரிமையாளர் ஆபிரகாமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story